தமிழக செய்திகள்

மாவீரன் அழகுமுத்து கோனின் வீரத்தையும், தியாகத்தையும் வணங்கி போற்றுவோம் - அன்புமணி புகழாரம்

மாவீரன் அழகு முத்துக்கோன் வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அதை பாடநூலில் தனிப் பாடமாக சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் அவர்களை கடுமையாக எதிர்த்த இந்திய விடுதலை போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரை நான் போற்றி வணங்குகிறேன். வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த அவர், இந்திய விடுதலைக்காக நடத்திய போர்களையும், செய்த தியாகங்களையும் நினைவு கூர்கிறேன்.

வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம்

இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது ஆகும். ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்து விட்ட சூழலில், மன்னிப்புக் கேட்டு வரி செலுத்த ஒப்புக்கொண்டால், உயிரையும், நிலத்தையும் காப்பாற்றி கொள்ளலாம் என நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து, பீரங்கியின் வாயில் வைத்து சுடப்படும் தண்டனையை மகிழ்வுடன் ஏற்ற மாவீரன் அவர். அவரின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம். அவரது வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அதை பாடநூலில் தனிப் பாடமாக சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.