தமிழக செய்திகள்

மாறுவோம், மாற்றுவோம்! - அண்ணாமலை பதிவு

'வி த லீடர்ஸ்’ இயக்கம் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி 'வி த லீடர்ஸ்’ என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். முதலில் இயக்கமாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

மாறுவோம், மாற்றுவோம்!

இந்நிலையில் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- எங்கள் வலைத்தளம் குறித்த தகவலை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம், 'வி த லீடர்ஸ்’ புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள புதிய அம்சங்களை ஆராய்ந்து, தொடர்ந்து இணைந்திருங்கள், மேலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாறுவோம், மாற்றுவோம்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.