சென்னை,
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சென்னையில் 'ஜனநாயகத்தை காப்போம்' பேரணி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜனநாயகத்தைக் காப்போம்! அராஜகத்தை ஒழிப்போம் என நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது;-
ஜனநாயகத்தைக் காப்போம்! அராஜகத்தை ஒழிப்போம்! என்ற முழக்கத்துடன் இன்று சென்னையில் மக்கள் பேராதரவுடன் நடைபெற்ற மாபெரும் தேசியக்கொடி பேரணியில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவரும், தமிழக பாஜகவின் மேலிடப் பார்வையாளருமான ராம் மாதவ் மற்றும் மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபியுடன் இணைந்து பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த மாபெரும் பேரணியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.