தமிழக செய்திகள்

அடிமைத்தன கூட்டணியில் இருந்து காங்கிரசுக்கு விடுதலை: மாணிக்கம் தாகூர்

நமது பலத்தை எடுத்துக் கொண்ட காலம் முடிந்து என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் நம்ம தலைவரை (ராகுல்காந்தி) காட்டி பலர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக ஆகியிருக்கிறார்கள். ஆனால், அதை நம்மை உணரவிடாமல் செய்துவிட்டனர். நமக்கு தெரியாமல் நமது பலத்தை எடுத்துக் கொண்ட காலம் முடிந்து, நம்முடைய பலத்தை நாமே கூட்டிக் கொள்வதற்கான காலம் தொடங்கி உள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து விடுதலை பெற்று உள்ளோம். அடிமைத்தனம் மற்றும் ஆணவத்தனத்தில் இருந்து விடு தலை பெற்று இருக்கிறோம். த.வெ.க.வுடனான கூட்டணி மரியாதையான கூட்டணி. 59 ஆண்டுகளாக அமைச்சர்களாகாமல் மற்றவர்களை ஆட்சியில் அமர வைக்கும் பொறுப்பு மட்டும் காங்கிரசாரிடம் இருந்தது. ஆனால் நமக்குரிய மரியாதையையும், இடத்தையும் கேட்டுப்பெறும் காலத்தில் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT