தமிழக செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம்பிரகாசம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வெங்கடேசன், துணை செயலாளர் ரா.விக்னேஷ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் நாங்குநேரியில் சின்னதுரை என்ற மாணவனும், அவரது தங்கையும் சக மாணவர்களால் தாக்கப்பட்டத்தை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

SCROLL FOR NEXT