தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

திசையன்விளையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை புறவழி சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே உள்ள காட்டு பகுதியில் அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அண்ணா சாலையை சேர்ந்த முனீஸ்வரன் மகன் அஜய் (வயது 22) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 49 மதுபாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT