தமிழக செய்திகள்

தஞ்சையில் மதுக்கடைகள் நாளை அடைப்பு

நாளை மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என தஞ்சை கலெக்டர் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்று விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை (செவ்வாய்க் கிழமை) மகாவீர் ஜெயந்தி அன்று திறக்கப்படாது. அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது.”

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.