தமிழக செய்திகள்

மே 1-ம் தேதி மதுக்கடைகள் மூடல்: கன்னியாகுமரி கலெக்டர் எச்சரிக்கை

மே 1-ம் தேதி மதுபான விற்பனை ஏதும் நடைபெறக்கூடாது எனவும், விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி,

மே தினத்தை முன்னிட்டு வருகின்ற மே 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அழகுமீனா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

மே தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் (டாஸ்மாக்), மதுபானக் கூடங்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL3AA உரிமம் பெற்ற தனியார் தங்கும் விடுதி மதுபானக் கூடங்கள் அனைத்தும் செயல்படாது.

அன்றைய தினம் மதுபான விற்பனை ஏதும் நடைபெறக்கூடாது எனவும், விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.