தமிழக செய்திகள்

மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு தற்போது மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக 'டாஸ்மாக்' இருக்கிறது. ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.

717 கடைகளை மூட உத்தரவு

தற்போது, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்றவுடன். தமிழகத்தில் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைப் பாதுகாக்கவும் 65 சிறப்பு படைகள் அமைக்கப்படும் என்று ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பஸ்-ரெயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 'டாஸ்மாக்' கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டிருந்தார்.

விவரம் வெளியீடு

மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேறு கடைகளுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக்' பார்களில் சட்டவிரோத மது விற்பனை தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது.

இதனிடையே, பல்வேறு கட்சி தலைவர்கள் டாஸ்மாக் கடை மூடல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், தமிழக அரசு தற்போது மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

மாவட்டம்எண்ணிக்கை
சென்னை வடக்கு13
சென்னை மத்திய9
சென்னை தெற்கு9
காஞ்சிபுரம் வடக்கு10
காஞ்சிபுரம் தெற்கு8
திருவள்ளூர் கிழக்கு27
திருவள்ளூர் மேற்கு6
கோயம்புத்தூர் வடக்கு48
கோயம்புத்தூர் தெற்கு23
கரூர்8
ஈரோடு42
திருப்பூர்31
நீலகிரி27
அரக்கோணம்7
தருமபுரி7
கிருஷ்ணகிரி7
நாமக்கல்14
சேலம்22
திருவண்ணாமலை19
வேலூர்6
கடலூர்21
நாகப்பட்டினம்4
புதுக்கோட்டை17
பெரம்பலூர்6
தஞ்சாவூர்6
திருச்சிராப்பள்ளி15
திருவாரூர்6
விழுப்புரம்9
திண்டுக்கல்26
கன்னியாகுமரி15
ராமநாதபுரம்29
தேனி12
திருநெல்வேலி33
தூத்துக்குடி63
மதுரை தெற்கு39
மதுரை வடக்கு13
விருதுநகர்42
சிவகங்கை18
மண்டல வாரியான மொத்தம்
மண்டலம்எண்ணிக்கை
சென்னை மண்டலம்82
கோயம்புத்தூர் மண்டலம்179
சேலம் மண்டலம்82
திருச்சி மண்டலம்84
மதுரை மண்டலம்290
மொத்தம்: 717 கடைகள்