கன்னியாகுமரி,
விற்பனை செய்யப்பட்ட வடையில் பல்லி இறந்து கிடந்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் சந்திப்பு பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் உணவு வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது அவரிடம் விற்பனை செய்யபட்ட வடையில் பல்லி இறந்துகிடந்ததாக அவர் வீடியோ வெளியிட்டார்.
இதனை பார்த்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தற்காலிக சீல் வைத்தனர். அப்போது உணவு தயாரிக்கு பகுதி சுகாதாரமற்ற முறையில் இருந்ததாகவும், அங்கு பணியில் ஈடுபட்ட வந்த ஊழியர் கையுறை அணியாமல் பணியாற்றியதாகவும் தற்காலிக சீல் வைக்கப்பட்டுள்ளது என உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.