தமிழக செய்திகள்

நாகை மாவட்டத்துக்கு 20-ந் தேதி உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 5-ந்தேதி பணி நாளாக செயல்படும்.

நாகப்பட்டினம்,

நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வரும் 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உள்ளூர் விடுமுறை

நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனக்கூடு ஊர்வலம் 20-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 5-ந்தேதி பணி நாள்

இந்த விடுமுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். இருப்பினும், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அலுவலகங்கள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT