தமிழக செய்திகள்

குமரி மாவட்டத்துக்கு 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை!

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 12-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் செயல்படும்.

நாகர்கோவில்,

கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி அடுத்த மாதம் டிசம்பர் 3-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டும் என கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி அடுத்த மாதம் டிசம்பர் 3-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 12-ந் தேதி (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் செயல்படும். மேலும் உள்ளூர் விடுமுறை தினத்தன்று அவசர தேவைகளுக்காக செலவாணி முறிச்சட்டத்தின் படி மாவட்ட கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT