நெல்லை,
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறை தினத்தில் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.
இதேபோல், தென்காசி மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.