காரைக்கால்,
காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 20ம் தேதி இரவு அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலாவும், 21ம்தேதி செண்பகத் தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளலும், நேற்று பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது.
இந்த சூழலில் நாளை (27ம் தேதி) காலை 5.30 மணிக்கு மேல் செண்பக தியாகராஜர் தேரில் எழுந்தருள செய்து தேர் திருவிழா நடக்கிறது. தேர் திருவிழாவிற்காக 5 தேர்கள் தயார் செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா திருத்தேரோட்டம் நாளை நடைபெறுவதால் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.