தமிழக செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் மாதம் 6 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகை,

நீலகிரி மாவட்டம் நாளை (மே -18) உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கவுள்ள 128-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி மலர் கண்காட்சிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 18ம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் மாதம் 6 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.