தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய உள்ளது. இதனால், இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இன்று பிரசாரம் செய்யும் இடங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு; .
ராகுல் காந்தி: கன்னியாகுமரி, நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: சென்னை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
எடப்பாடி.த.வெ.க. தலைவர் விஜய்: சென்னை
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: நீடாமங்கலம், ஒரத்தநாடு.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: கடையநல்லூர்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம்: மதுராந்தகம், செய்யூர்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன்: சென்னை.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்: மேட்டூர் (மேச்சேரி), எடப்பாடி (ஜலகண்டபுரம்), சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சங்ககிரி (தாரமங்கலம்).
பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை: சென்னை.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: திருவெறும்பூர், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: குன்னம், அரியலூர், ஒரத்தநாடு.பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்: வாசுதேவநல்லூர், ராஜபாளையம்