தமிழக செய்திகள்

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை முடிவு செய்யக்கூடாது: சீமான்

தொகுதிகளை அதிகரித்தால்தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்பது என்ன மாதிரியான மனநிலை என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படும். கல்வியைகடன் வாங்கி படிக்கும் நிலையை உருவாக்கியது யார்?இலவசம் என்பது மக்களை ஏமாற்றும் முயற்சி. மகளிருக்கு இடது ஒதுக்கீடு வழங்கவும் தொகுதி மறுசீரமைப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினாலும் ஆண்களுக்கான எண்ணிக்கை குறையக்கூடாது என்பது ஆணாதிக்க சிந்தனை.

தொகுதிகளை அதிகரித்தால்தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்பது என்ன மாதிரியான மனநிலை. தமிழகத்தில் மக்களவை தொகுதியின் எண்ணிக்கையை பாஜக அரசு குறைக்க முயற்சி. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை முடிவு செய்யக்கூடாது” என்று கூறினார்.