கன்னியாகுமரி அருகே உள்ள வட்டகோட்டை பால்கு ளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த வர் சுதாகர் (வயது39), லாரி டிரைவர். இவர் மீது அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவர் கடந்த ஒரு மாதமாக போலீசாருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக கூறப்படு கிறது. அவரை போலீசார் தேடி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கும் முன்பு விசார ணைக்காக போலீசார், சுதாகரை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி நாடான்குளம் பகுதியில் சுதாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் கன்னி யாகுமரி போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சுதாகர் தனது மரணத்திற்கு அஞ்சுகிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற் றும் சப்-இன்ஸ்பெக்டர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்ப டுகிறது. இதனால், சுதாகரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து சென்றனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.