தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரி கள் சென்று வருகின்றன. விதிமீறல்களை தடுக்க லாரிகளை நிறுத்தி போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தொப்பூர் பகுதியில் வந்த சரக்கு லாரிகளை நிறுத்தி டிரைவர்களிடம் சில போலீசார் மாமூல் வசூலித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுபற்றி அறிந்த தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது சில போலீசார் மாமூல் வசூலித்து இருப்பது உறுதியானது.
இதையடுத்து தொப்பூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வபதி (வயது 50), போலீஸ் ஏட்டுகள் வெங்கடேசன் (31), பரதன் (35) ஆகிய 3 பேரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த புகார் தொடர்பாக உயர் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகிறார்கள்.