தமிழக செய்திகள்

செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி டிரைவர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். லாரி டிரைவரான இவர் கம்பத்தில் இருந்து ஏலக்காய் லோடு ஏற்றி சென்றுள்ளார். செல்லும் வழியில் லாரி தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இது தொடர்பாக மதுரை செக்கானூரணி போலீஸ் ஸ்டேஷனிற்கு புகார் கொடுக்க வந்திருந்தார். புகாரில் சந்தேகம் இருந்ததால் ஸ்டேஷனில் இருக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.

எஸ்பி நேரில் விசாரணை

இந்த நிலையில், போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிய படி உடல் மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட எஸ்பி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சஸ்பெண்ட்

இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர், 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே,தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் லாரி டிரைவர் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகயிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT