தமிழக செய்திகள்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

காவேரிப்பட்டணம் அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் ஜெகதாப் கெட்டூர் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கேட்பாரற்று நின்ற ஒரு லாரியை சோதனை செய்த போது மணல் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜெகதாப்பில் இருந்து பையூருக்கு மணல் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து டிரைவர் மற்றும் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT