கிருஷ்ணகிரி,
தமிழகத்தின் ஓசூரைச் சேர்ந்த விமானி ஒருவர், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை தனது பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த கார்த்திக் விமானியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் வியட்நாம் நாட்டின் பூ குவோக் தீவில் ஆசிரியராக பணியாற்றி வரும் சியோ டிங்கன் என்பவருக்கும் இடையே கடந்த 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் காதல் மலர்ந்தது.
தங்களது காதல் குறித்து இருவரும் அவரவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். இதனைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) ஓசூரில் உள்ள திருமண மண்டபத்தில் 2 வீட்டுப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கார்த்திக் - சியோ டிங்கன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணம் குறித்து மணப்பெண் சியோ டிங்கன் கூறுகையில், "கார்த்திக்குடன் உண்மையான, உறுதியான காதல் உறவில் இருக்க விரும்பினேன். அதற்காகவே எனது தாயகம் விட்டு இந்தியா வந்துள்ளேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடல் கடந்து மலர்ந்த இந்த காதல் திருமணத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.