சென்னை,
திருச்சி - ஙெ்களூரு இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில், டிக்கெட் முன்பதிவு குறைந்து போனதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு ஜூலை 21 மற்றும் 28-ந் தேதிகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவித்த சிறப்பு ரெயில் (வண்டி எண் 06007) ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு ஜூலை 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 3 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயிலும் (06008) ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.