மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்
மரகதம் குமாரவேல் - 3,616 (த.வெ.க.)
பரந்தாமன் - 2,690 (தி.மு.க.)
கனிதா சம்பத் - 2,121 (அ.தி.மு.க.)
தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்
சத்தியபாமா - 1,146 (த.வெ.க.)
பானுமதி - 949 (அ.தி.மு.க.)
சுகன்யா - 643 (தி.மு.க.)
மதுராந்தகம் மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில்,
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்றில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 189 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
மதுராந்தகம் - தவெக 282, திமுக 158, அதிமுக 141
நாம் தமிழர் 5, மார்க்சிஸ்ட் -1 வாக்குகள் பெற்றுள்ளன.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாம் இடத்தில் தி.மு.க.வும், மூன்றாம் இடத்தில் அ.தி.மு.க.வும் இருந்து வருகின்றன.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
முன்னதாக இன்று காலை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர், தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்பின்னர் எந்திரங்களில் பதிவானவை எண்ணப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகள் நடைபெறும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய பயன்படுத்தப்படும் 'விவிபாட்'டில் சேகரிக்கப்பட்ட சீட்டுகள் தனியாக எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணிக்கு மொத்தம் 500 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14 மேஜைகள் போடப்பட்ட பகுதி முழுவதும் இரும்பு கூண்டுகளால் அடைக்கப்பட்டு இருக்கும். 14 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி முடிந்தால் ஒரு சுற்று நிறைவடையும். அதன்பிறகு அந்த எந்திரங்கள் அனைத்தையும் அங்கிருந்து மற்றொரு பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்றுவிடுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு சுற்று முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 14 மேஜைகளில் நிரப்பப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
ஒவ்வொரு சுற்று முடிந்ததும், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறித்து ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும். மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அதன்பிறகு கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தபால் வாக்குகளையும் சேர்த்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளருக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் முன்னணி நிலவரம் காலை 11 மணி முதல் தெரியவரும். மதியம் 3 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையத்துக்கு முன்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், கட்சியினர் தேர்தல் முடிவை அறியும்வகையில் திரளுவார்கள் என்பதால் வாக்கு எண்ணும் மையத்துக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
காலை 7 மணி முதல் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் தங்களது முகவர்களின் விவரங்களை படிவம் 18-ல் பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து முகவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கி இருக்கிறார். அந்த அடையாள அட்டை மற்றும் படிவம் 18-ன் நகலுடன் வரும் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் செல்போன், மடிக்கணினி, ஒலி மற்றும் ஒளியை பதிவு செய்யும் எந்தவொரு எலெக்ட்ரானிக் கருவிகளையும் கொண்டு செல்ல அனுமதியில்லை.
தாராபுரத்தை பொறுத்தவரை வாக்கு எண்ணும் மையத்தில் இன்று காலை முதலில் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து வாக்குச்சாவடிகள் வரிசை எண் வாரியாக எந்திரங்கள் எடுக்கப்பட்டு 14 மேஜைகளில் ஊழியர்கள் வைத்தனர். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலைமையில் ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் அலுவலர்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண உள்ளனர்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.. மதுராந்தகம் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகள் நடைபெறும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய பயன்படுத்தப்படும் 'விவிபாட்'டில் சேகரிக்கப்பட்ட சீட்டுகள் தனியாக எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இன்று காலை மாவட்ட தேர்தல் அலுவலரான செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன்பின்னர் எந்திரங்களில் பதிவானவை எண்ணப்படுகிறது.
2 தொகுதிகளிலும் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுராந்தகம் தொகுதியில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 423 வாக்குகள் பதிவாகின. அதாவது 86.26 சதவீத வாக்குகள் பதிவாகின. தாராபுரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 214 வாக்குகள் பதிவாகின. அதாவது 80.25 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு முடிந்ததும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டுக்காக ஒருங்கிணைந்த பயிற்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.
தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகேவுள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய துணை ராணுவப்படை, ஆயுதப் படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுதவிர கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல். தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் களம் இறங்கினர்.
இதேபோல் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா (த.வெ.க.), சுகன்யா (தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.), கார்த்திகா (நாம் தமிழர்), லட்சுமணன் (இ.கம்யூனிஸ்டு) மற்றும் சுயேச்சைகள் உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும் இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிக இடங்களை வென்ற த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
உள்கட்சி பூசல் காரணமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) உள்ளிட்ட 6 எம்.எல். ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் சேர்ந்தனர்.
இதேபோல் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பத வியை ராஜினாமா செய்தார். இதனால் 7 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. கோர்ட்டு வழக்கு காரணமாக மற்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.