தமிழக செய்திகள்

மதுரை: ஊருணியில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரின் 3 வயது மகன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனான்.

மதுரை,

மதுரை அவனியாபுரம் அருகே பர்மா காலனியைச் சேர்ந்த பாரதிய ஜனதா பிரமுகர் காளிதாஸ் என்பவரின் 3 வயது மகன் முத்துதஷ்விக், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனான்.

உறவினர்கள் தேடிய போது வீட்டின் அருகிலுள்ள ஊருணியில் சிறுவன் மூழ்கிக்கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக சிறுவன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.