சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, 109 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. அதிமுக 67 தொகுதிகளிலும், திமுக 58 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 60,080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் மதுரை வீரனை விட (மொத்த வாக்கு - 57,361) 2,719 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் (எ) செல்வம் 56,744 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளார். நாதக வேட்பாளர் கோட்டை குமார் 9,570 வாக்குகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார்.