தமிழக செய்திகள்

மதுரை: மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு

சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை ஆருத்ரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூடப்படாமல் இருந்த 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் சிறுமி விழுந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் கூக்குரலை கேட்டு அங்கு வந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் காவல் துணை ஆணையர் அனிதா நேரில் விசாரணை நடத்தினார். 

SCROLL FOR NEXT