சென்னை,
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், சுற்றுலா தளங்களில் இருக்கும் செல்பி பாயிண்ட்டுகளில்(Selfie Point) வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மொழிச்சட்டத்தின்படி பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என்று கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் 5<3<2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செல்பி பாயிண்ட் அமைப்பதில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.