மதுரை,
மதுரையில் ஜேசிபி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணியில் ஜேசிபி வாகனம் ஈடுபட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த சாலையில் வேகமாக வந்த கார் சாலையில் பணிகள் மேற்கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார்,விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.