தமிழக செய்திகள்

மதுரை நகைக்கடை கொள்ளை: இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தப்பிக்கும் கொள்ளையன் நிஷாந்த்

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட நகைக்கடையில் ரூ.21 கோடி நகைகள் கொள் ளைபோன சம்பவத்தில், கொள்ளையன் நிஷாந்த் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தப்பித்து வருவதால் அவனை பிடிக்க போலீசார் 4-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய நகைக்கடையில் கொள்ளை

மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில், தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் உள்ளது. இந்த நகைக்கடையானது சில தினங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. கடந்த 12-ந்தேதி அதிகாலை யில், கடைக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள் ளையடித்து தப்பி சென்றது தெரியவந்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில், உடல் முழுவதும் கருப்பு துணியை சுற்றிக்கொண்டு தனி ஒருவனாக முகமூடி, கையுறை அணிந்தவாறு வந்து நகைகளை கொள்ளையடித்த அந்த நபர், பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் நிஷாந்த் (வயது 25) என கண்டுபிடிக்கப்பட்டது.

இன்ஸ்டா பிரபலம் உள்பட 2 பேர் கைது

இதற்கிடையே கொள்ளை நடந்த தினத்தில், நிஷாந்த்தின் செல்போன் எண் சிக்னல்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நிஷாந்தின் காதலியும், மதுரையை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான மீனாட்சி (23) என்பவரிடம் அவர் பேசியது தெரியவந்தது. அவரை பிடித்து நடத்திய விசாரணையில் தனது ஸ்கூட்டரை கொடுத்து கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி கொடுத்தது, மீனாட்சி என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் (50) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.மேலும், மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ தங்க, வைர நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

4-வது நாளாக தேடுதல் வேட்டை

இந்தநிலையில், தனி ஒருவனாக கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த், பல்வேறு இடங்களுக்கு தப்பி சென்று, போலீசாருக்கு தண்ணீர் காட்டி வருகிறார். அவரை பிடிப்பதற்காக தனிப்படைகள் 4-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தான் இருக்கிறாரா அல்லது வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று விட்டாரா? என பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த பணிகள் ஒரு புறம் இருக்க மாடக்குளம் அருகே கண்மாய் கரை பகுதியில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடம், நிஷாந்தின் வீடு, மீனாட்சியின் வீடு உள்ளிட்ட இடங் களில் போலீசார் 2-வது நாளாக நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT