தமிழக செய்திகள்

மதுரை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பொதும்பு பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது54). இவர் வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT