தமிழக செய்திகள்

மதுரை-கான்பூர் சிறப்பு ரெயில் ரத்து - வடக்கு மத்திய ரெயில்வே தகவல்

மதுரை-கான்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மதுரை - கான்பூர் இடையேயான சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக, வடக்கு மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“கான்பூர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01925) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், மதுரையில் இருந்து கான்பூர் சென்டிரலுக்கு அக்டோபர் 3, 10, 17 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (01926) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT