தமிழக செய்திகள்

மதுரை: விமானப்படை சிறப்பு விமானம் மூலம் வந்த நீட் வினாத்தாள்

மதுரையில் இருந்து ஆறு மாவட்டங்களுக்கு இந்தியா தபால்துறை வாகனம் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் காவல் துறை சிறப்பு பாதுகாப்பு வாகனங்கள் ஏற்பாடுகள் மூலம் கொண்டு சென்றனர்.

மதுரை,

வினாத்தாள் கசிவை தடுக்கும் நோக்கில், ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்களை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் கொண்டு செல்ல மத்திய பாதுகாப்பு துறை அனுமதி அளித்தது.

தபால்துறை வாகனம்

விமானப்படை விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்ட நீட் மறுதேர்வு வினாத்தாள்களை, தேர்வு மையங்களுக்கு மாற்றும் வழியில் மதுரையில் இருந்து நெல்லை தூத்துக்குடி சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு இந்தியா தபால்துறை வாகனம் மூலம் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் காவல் துறை சிறப்பு பாதுகாப்பு வாகனங்கள் ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு வினாத்தாளை கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் பழுதாகி, பாதியில் நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.