தமிழக செய்திகள்

மதுரை தெற்கு தொகுதி: தவெக வேட்பாளர் கோபிசன் வெற்றி

திமுக சார்பாக போட்டியிட்ட பூமிநாதன் 38,542 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பல்வேறு தொகுதிகளில் வெற்றி விவரங்கள் தெரியத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், மதுரை தெற்கு தொகுதியில் தவெக வெற்றி பெற்றுள்ளது. தவெக வேட்பாளர் கோபிசன் 58,598 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

திமுக சார்பாக போட்டியிட்ட பூமிநாதன் 38,542 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பாஜக சார்பாக போட்டியிட்ட ராம சீனிவாசன் 29,489 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் சுமதி 5,497 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தவெக தொடர்ந்து பல்வேறு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதய நிலவரப்படி தவெக 110 இடங்களிலும் திமுக 65 இடங்களிலும் அதிமுக 59 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.