சென்னை,
மகா சிவராத்திரி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,
சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06135) வருகிற 13ம் தேதி (நாளை) இரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.
மறுமார்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06136) வருகிற 16ம் தேதி இரவு 9.35 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்துசேரும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06113) வருகிற 13ம் தேதி இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.
மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06114) வருகிற 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்துசேரும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.