தமிழக செய்திகள்

மகாவீர் ஜெயந்தி: சென்னையில் 31-ந்தேதி 4 இறைச்சிக் கூடங்கள் மூடல்

மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களை 31-ந்தேதி மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 31.03.2026 (செய்வாய்க்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.