தமிழக செய்திகள்

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் கிராமம் இந்திராநகரில் மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அதனை பெண்கள் பயன்படுத்த முடியவில்லை. மேலும் அங்குள்ள மின் மோட்டார் பழுதடைந்து பல மாதமாக அப்படியே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SCROLL FOR NEXT