தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: கோவை வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

சிக்னல் பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

போத்தனூர் ரெயில் நிலைய பகுதியில் சிக்னல் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) ரெயில் சேவையில் மாற்றம் செய்யப் பட உள்ளது. அதன்படி தன்பாத்-போத்தனூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை கோவை ரெயில் நிலையம் வரை இயக்கப்படும்.

மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சி வரை மட்டும் இயக்கப்படும். பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இயக்கப்படாது. கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சியில் இருந்து மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும். இந்த ரெயில் கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படாது என ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.