திருச்சி,
திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கோட்டத்தின் பொன்மலை ஜங்ஷனில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி விழுப்புரம் -திருச்சி மெமு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் -56111) நாளை (சனிக்கிழமை) மற்றும் 12, 13-ந் தேதிகளில் வாளாடி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது விழுப்புரத்தில் இருந்து வாளாடி வரை மட்டுமே இயங்கும்.
இதேபோல், மயிலாடுதுறை திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16833) மேற்கண்ட தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து திருவெறும்பூர் வரையும், சேலம் - மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16812) நாளை சேலத்தில் இருந்து திருச்சி வரையும், காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண் 76825) வருகிற 13 மற்றும் 15-ந்தேதிகளில் காரைக்காலில் இருந்து திருவெறும்பூர் வரையும், திருப்பாதிரிப்புலியூர் திருச்சி மெமு ரெயில் (எண் 76811) வருகிற 15-ந்தேதியில் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து வாளாடி வரையும், கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12084) வருகிற 15-ந்தேதி கோவையில் இருந்து திருச்சி ஜங்ஷன் வரையும் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி - மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16834) நாளை மற்றும் 12, 13-ந் தேதிகளில் திருச்சி வரை பகுதியாக ரத்து செய்யப் பட்டு, தஞ்சாவூரில் இருந்து மாலை 5.25 மணிக்கு மயிலாடுதுறை புறப்பட்டு செல்லும். இதேபோல் திருச்சி- விழுப்புரம் மெமு ரெயில் (எண் 56112) மேற்கண்ட நாட்களில் ஸ்ரீரங்கத்தில் இருந்து விழுப்புரத்திற்கு மாலை 6.25 மணிக்கும், திருச்சி -திருப்பாதிரிப்புலியூர் டெமு ரெயில் (எண் 76812) வருகிற 13 மற்றும் 15-ந்தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூருக்கு மாலை 4.10 மணிக்கும், திருச்சி சென்னை எழும்பூர் சோழன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22676) வருகிற 15-ந்தேதி தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு மதியம் 1 மணிக் கும், மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12083) வருகிற 15-ந்தேதி திருச்சியில் இருந்து கோவைக்கு மாலை 5.25 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவ தால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய் யப்பட்டு உள்ளது. அதன்படி, காரைக்காலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் காரைக்கால் திருச்சி பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 56832) வரு கிற 13-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 25 நிமிடம் தாமதமாக காலை 10.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மயி லாடுதுறை - கோவை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12083) மயிலாடு துறையில் இருந்து நாளை மற்றும் 12, 13-ந்தேதிகளில் மதியம் 3.45 மணிக்கும், மதுரை-சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22672) மதுரை யில் இருந்து வருகிற 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கும். மயிலாடுதுறை செங் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16847) மயிலாடுதுறையில் இருந்து வருகிற 15-ந்தேதி மதியம் 1.35 மணிக்கும், தூத்துக்குடி கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17616) தூத்துக்குடியில் இருந்து வருகிற 15-ந்தேதி காலை 9.15 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.