சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை (வருகிற 16, 23, 30 தவிர) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரெயில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ரெயில் நிலையத்தில் நிற்காது. அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.