சென்னை,
மதுரை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், முக்கிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
”கன்னியாகுமரியில் இருந்து ஹவுராவுக்கு ஆகஸ்டு 8-ந் தேதி காலை 5.50 மணிக்கு புறப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12666) கொடை ரோடு, திண்டுக்கலை தவிர்த்து, மாற்றுப்பாதையில் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.
இதேபோல், நாகர்கோவிலில் இருந்து - மும்பை லோக்மான்ய திலக்குக்கு ஆகஸ்டு 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) திண்டுக்கல்லை தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஆகஸ்டு 12-ந் தேதி இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களை தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல், நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடாவுக்கு ஆகஸ்டு 22, 29 ஆகிய தேதிகளில் காலை 9.25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16354) மதுரை, திண்டுக்கல் ரெயில் நிலையங்களை தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது, மானாமதுரை, காரைக்குடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.