சென்னை,
சென்னை ரெயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து மதியம் 2.30 மணிக்கு கோவை நோக்கி புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12679) ஜூலை 10, 12, 15, 17, 19, 22 ஆகிய தேதிகளில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. மாறாக, காட்பாடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து பெங்களூருவுக்கு மதியம் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய லால்பாக் எக்ஸ்பிரஸ் (12607) ரெயில், ஜூலை 10, 12, 15, 17, 19, 22 ஆகிய தேதிகளில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மாறாக, இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும்.
மேலும், கோவையில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (12680), காட்பாடி - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது, காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
அதேபோல், அசோகாபுரத்தில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு காலை 4.45 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16552), ஜூலை 10, 12, 15, 17, 19, 22 ஆகிய தேதிகளில் காட்பாடி - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.