நெல்லை,
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (வியாழக்கிழமை) முதல் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதன்படி திருச்செந்தூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர்- நெல்லை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56004) இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை 5 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளது.
மறுமார்க்கமாக மாலை 4.30 மணிக்கு புறப்படும் நெல்லை- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (எண்.56003) இன்று முதல் 30-ந்தேதி வரை 5 தினங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் (வ.எண் 56742) செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில், இன்று முதல் 30-ந்தேதி வரை சேரன்மாதேவி- நெல்லை சந்திப்பு இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. நெல்லையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் (எண் 56743) நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரெயில் இன்று முதல் 30-ந்தேதி வரை நெல்லை -சேரன்மாதேவி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நெல்லைக்கு பதிலாக சேரன்மகாதேவியில் இருந்து ரெயில் இயக்கப்பட உள்ளது.