தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை அறிவிப்பு

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை:

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (8.6.2026, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சித்தாலப்பாக்கம்:

திருமுருகன் சாலை, ராகவேந்திர சாலை, கண்ணம்மாள் தெரு, ரமணர் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சேதுநாராயணா தெரு, ஜெயேந்திரர் தெரு, குலோத்துங்கன் தெரு, என்எஸ்என் பள்ளி, மார்ட்டின் லூதர் தெரு, ராஜராஜேஸ்வரி தெரு, பவானி தெரு, லெனின் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.