தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை மறுநாள் (9.6.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோவூர்:

மூகாம்பிகைநகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம்நகர், குமரன்நகர், பெரியபனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டாம்கட்டளை, சிக்கராயபுரம், கொள்ளச்சேரி.

பல்லாவரம்:

கணபதிபுரம், விஸ்வகர்மாநகர், நாயுடு ஷாப் சாலை, ஸ்கைபார்க் சர்ச் சாலை, டி.வி.எஸ். ஃபிளாட்ஸ், அக்னி ஃபிளாட்ஸ், பஞ்சாயத்து காலனி, சுகுணா காலனி மற்றும் நடேசன்நகர்.

காரம்பாக்கம்:

வானகரம், பி.எச்.சாலை, சிவபூதம், ராஜீவ்நகர், கந்தமாபுரம், வானகரம் சர்வீஸ் சாலை, செட்டியார் அகரம், ஐ.சி.எல்., நூம்பல், அக்னி ஃபேரி லேண்ட், மூர்த்திநகர், லட்சுமிநகர், இந்திராநகர், போரூர் கார்டன் பேஸ் 1 மற்றும் 2, ராமசாமிநகர், ஆண்டாள்நகர், சேக்மணியம், மெட்ரோநகர், மகரிஷி டீச்சர்ஸ் காலனி, சமயபுரம், காவேரிநகர், பாரதி சாலை, தர்மராஜாநகர், அருணாச்சலம்நகர், மோதிநகர் மற்றும் வெங்கடேஸ்வராநகர்.

திருவேற்காடு:

வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோயில் தெரு, பத்மாவதிநகர், கூட்டுறவுநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.