தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (20.5.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பொழிச்சலூர்: திருநகர், பத்மநாபாநகர், ஞானமணிநகர், பவானிநகர், பிசிஎஸ் காலனி, ராஜேஸ்வரிநகர், பஜனை கோயில் தெரு, பிரேம்நகர், லட்சுமிநகர், மூகாம்பிகைநகர், விநாயகாநகர், சண்முகாநகர், தீப்பாச்சியம்மன் கோயில் தெரு, எல்.ஆர்.ராஜமாணிக்கம் தெரு.

திருமுடிவாக்கம்: இந்திராநகர் , குருநகர், விவேகானந்தநகர், பழந்தண்டலம், நாகன்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.