தமிழக செய்திகள்

குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்

மறுசீரமைப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை கோட்டத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி காரணமாக குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வரமாறு:-

குருவாயூரில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 5,6,7,8, 11,12,13, 14,15,18, 19,20,21,22,25, 26,27,28,29 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.161289) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.

மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரெயில் நிலையங்கள் செல்லாது. அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.