தமிழக செய்திகள்

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்

சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தை தெற்கு ரெயில்வே மாற்றி அமைத்துள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூரில் நடைமேடை எண்.10 மற்றும் 11 இல் உள்ள வழித்தடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியை கருத்தில் கொண்டும், ரெயில் இயக்கத்தை எளிதாக்கும் வகையிலும், ரெயில் சேவைகளின் முறையில் மாற்றங்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

புறப்படும் இடம் மாற்றம்;-

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12661) வருகிற மார்ச் 02 முதல் 16ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.

நிறுத்தும் இடம் மாற்றம்:-

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12632) வருகிற மார்ச் 01 முதல் 15ம் தேதி வரை காலை 6.25 மணிக்கு தாம்பரத்தில் நிறுத்தப்படும்.

புறப்படும் நேரம் மாற்றம்:-

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 8 மணிக்கு புறப்பட இருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22675) வருகிற பிப்ரவரி 28 முதல் மார்ச் 15 வரை சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு (2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதம்) புறப்படும்.