சென்னை,
சென்னையை அடுத்த கானத்தூர் அருகே உள்ள பனையூர் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கானத்தூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா? அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.