தமிழக செய்திகள்

காப்பு காட்டில் ஆண் பிணம்

உளுந்தூர்பேட்டை அருகே காப்பு காட்டில் ஆண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே மலையனூர் கிராம எல்லையில் எடைக்கல் காப்புக்காடு பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் எடைக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் இறந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? அவரை யாரேனும் கொலை செய்து காப்புக்காட்டில் வீசிசென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.